2025 ஜூலை 24, வியாழக்கிழமை

தருமபுரம் கடற்றொழிலாளர்களுக்கு 21 லட்சம் ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்கள்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-சி. சிவகருணாகரன்
 
கிளிநொச்சி கண்டவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கடற்றொழிலாளர்களுக்கு யுஎன்எச்சிஆர் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் சேவா லங்கா நிறுவனத்தின் அனுசரணையில் 21 இலட்சம் ரூபா பெறுமதியான 30 குல்லாக்களும், 300 வலைகளும் வழங்கும் வழங்கப்பட்டுள்ளன.
 
ஆனையிறவுக் கடனீரேரியில் மீன் மற்றும் இறால் பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் தொழில் முயற்சியை மேம்படுத்தும் நோக்கில் இவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அண்மையில் வழங்கி வைத்தார்.
 
கண்டாவளை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சி. அருமைராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலர் த. முகுந்தன், கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவித்திட்டப்பணிப்பாளர் அ. கேதீஸ்வரன், கூட்டுறவு பரிசோதகர் செ. சிறிஸ்கந்தராசா, சேவாலங்கா நிறுவன திட்ட இணைப்பாளர் என். முகுந்தன், யுஎன்எச்சிஆர் நிறுவன பிரதிநிதி லோ. வதனன் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பெருமளவான உறுப்பினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .