2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முகமாலையில் மீள்குடியேறுவதற்கு 243 குடும்பங்கள் பதிவு

George   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முகமாலை பகுதியில் மீளக்குடியேறுவதற்கு இதுவரையில் 243 குடும்பங்களை சேர்ந்த 1220 பேர் பதிவு செய்துள்ளதாக பளை பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படாத பகுதிகளில் ஒன்றாக காணப்படும் முகமாலை பிரதேசத்தில் தற்போது வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யுத்தம் கடுமையாக இடம்பெற்ற பிரதேசம் என்பதால்;, அவ்விடத்தில் அதிகளவான வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை அகற்றுவதில் காலதாமதங்கள் ஏற்பட்டன. 

இதனால், அப்பகுதியில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 7ஆம் திகதி பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலில், இவ்வருட இறுதிக்குள் முகாமாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது. 

இந்நிலையில் முகமாலைப்;பகுதியில்  103 குடும்பங்களைச் சேர்ந்த 339 பேரும் இத்தாவில் பகுதியில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேரும் வேம்பொடுகேணியில் 130 குடும்பங்களைச் சேர்ந்த 842 பேரும் இவ்வாறு மீள்குடியேறுவதற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். 

மேற்படி பிரதேச மக்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா ஆகிய மாவட்டங்களில் தற்போது, தற்காலிகமாக வசிப்பதாக பிரதேச சபை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .