2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வவுனியா மாவட்டத்தில் 25,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்: அரசாங்க அதிபர் தகவல்

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)
வவுனியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் 6892 குடும்பங்களை சேர்ந்த 25,104 பேர் பாதிப்படைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 4493 குடும்பங்களை சேர்ந்த 17,311 பேரும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 20 குடும்பங்களை சேர்ந்த 55 பேரும் வவுனியா தெற்கில் 514 குடும்பங்களை சேர்ந்த 819 பேரும் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 1865 குடும்பங்களை சேர்ந்த 6,919 பேருமாக 6892 குடும்பங்களை சேர்ந்த 25,104 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இவர்களில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 1737 குடும்பங்கள் 6 நலன்புரி நிலையங்களிலும் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 50 குடும்பங்கள் 1 நலன்புரி நிலையத்திலும் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 1865 குடும்பங்கள் 26 நலன்புரி நிலையத்திலுமாக 33 நலன்புரி நிலையத்தில் 3652 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 106 வீடுகள் முழுமையாகவும் 186வீடுகள் பகுதியளவிலும் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகள் பகுதியிளவிலும் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X