2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

இராமேஸ்வர மீனவர்கள் 41பேர் விடுதலை

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தஇராமேஸ்வர மீனவர்கள் 41பேர் இன்று புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி கைது செய்யப்பட்ட 21 மீனவர்களும், ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி கைது செய்யப்பட்ட 20 மீனவர்களுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக்கூறி குறித்த 41 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த 41 மீனவர்களும் இன்று புதன்கிழமை காலை மீண்டும் மன்னார் நீதவான் ஆனந்தி கணகரட்னம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது குறித்த மீனவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான இ.கயஸ் பல்டானோ மற்றும் ரி.வினோதன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் ஆனந்தி கணகரட்னம், மீனவர்களை விடுதலை செய்தார். இந்நிலையில், மீனவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தலைமன்னார் பொலிஸார் இவர்களை கடற்படையினரூடாக இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 22ஆம் திகதி கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 20 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .