2025 ஜூலை 26, சனிக்கிழமை

கிளிநொச்சியில் 10,261 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை: ரூபவதி கேதீஸ்வரன்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 25 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னமும் 10,261 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் 40,594 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.

மீள்குடியேறியவர்களில் 33 ஆயிரத்து 79 குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாகவுள்ளது. இவர்களில் 22,818 குடும்பங்களுக்கு அரச மற்றும் அரசசார்பற்ற,  இந்திய அரசாங்கத்தின் நிதியுதவிகள் மூலம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், அதிகளவான கண்ணிவெடிகள் காணப்படுகின்ற முகமாலை மற்றும் கிளாலிப் பகுதிகளில் கண்ணிவெடிகளை  அகற்றும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் அவ்விடங்களில் 524 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X