2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட முதியவர்கள்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 756 முதியவர்கள் வாழ்ந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 8,560 முதியவர்களும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 2661 முதியவர்களும், பூநகரி பிரதேச செயலக பிரிவில் 578 முதியவர்களும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 957 முதியவர்களும் வசித்து வருவதாக அந்த புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதியோர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் மாதாந்தம் தலா 1000 ரூபாவும் 60 வயதுக்கும்  70 வயதுக்கும்  இடைப்பட்டவர்களுக்கு 250 ரூபா தொடக்கம் 500 ரூபா வரையிலுமான உதவி தொகைகள் சமூக சேவைகள் அமைச்சின் நிதியுதவியில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனைவிட, ஆதரவற்ற முதியோர்களை அரச அங்கீகாரம் பெற்ற முதியோர் இல்லத்தில் இணைக்கும் நடவடிக்கையை மாவட்ட செயலக சமூக சேவைகள் அமைச்சின் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .