2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 12 ஆயிரம் முதியவர்கள் வசிக்கின்றனர்

Thipaan   / 2014 டிசெம்பர் 16 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 756 முதியவர்கள் வசித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட செயலக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 8 ஆயிரத்து 560 முதியவர்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 2 ஆயிரத்து 661 முதியவர்களும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 578 முதியவர்களும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 957 முதியவர்களும் வசித்து வருகின்றனர்.

சமூக சேவைகள் அமைச்சின் முதியவர்களுக்கான கொடுப்பனவு, முதியோர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு பொது நிறுவனங்களின் முன்னுரிமையளிக்கப்பட்டு சேவைகள் வழங்கப்படுகின்றன.

பெரும்பாலான முதியவர்கள் உறவினர்கள் வீடுகளில் போதிய பராமரிப்பின்றி வாழ்கிறார்கள். அவர்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில் சமூக சேவைகள் அமைச்சால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .