2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் 'ஈ - ஸ்கோப்–14' கல்விக் கண்காட்சி ஆரம்பம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் 'ஈ-ஸ்கோப்-14' எனும் தொனிப்பொருளிலான கல்விக் கண்காட்சி இன்று சனிக்கிழமை (27) ஆரம்பமாகியது.

மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயம், தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு முதலாவது வருடத்தை கடந்த நிலையில், இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை விருத்திசெய்து அவர்களின் திறன்களை வெளியுலகுக்கு கொண்டுவரும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.வை.மாஹீர் தெரிவித்தார்.

இக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு கைப்பணி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்தார்.

இக்கண்காட்சி இன்று சனிக்கிழமை 27ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை 29ஆம் திகதி வரையிலான மூன்று தினங்கள், காலை 8.30 தொடக்கம் மாலை 5.30 வரை பாடசாலையில் நடைபெறும்.

இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களை கலந்துகொள்ளுமாறு பாடசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த கண்காட்சியில் மாணவர்களுக்கான கல்விக்கண்காட்சிகள், சிறுவர்களுக்கான களியாட்டங்கள், முப்பரிமாண காட்சிகள், அதிரவைக்கும் இருட்டறைக்காட்சிகள், உலக அதிசயங்கள், மாயாஜாலங்கள் மற்றும் விஷப்பாம்புகளுடன் 12 வயது சிறுவனின் சாகாசக்காட்சிகள் ஆகியவை காண்பிக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய முதல் நாள் நிகழ்வு காலை 9.30மணிக்கு ஆரம்பமாகியது.

பாடசாலையின் அதிபர் ஜனாப் எம்.வை.மாஹீர் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் கலந்து கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை (28) இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் றிஸாட் பதியுதீனும், மூனறாம் நாள் நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.












You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .