2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மன்னார் விவசாயிகளுக்கு ரூ.1.5 மில்லியன் செலவில் விவசாய உள்ளீடுகள்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாண விவசாய அமைச்சுக்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தில் இருந்து 1.5 மில்லியன் ரூபாய் செலவில், மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்ச்சி உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட 250 விவசாயிகளுக்கு உள்ளீடுகள் மற்றும் உதவிகளை வழங்கி வைத்தார்.

இதன்போது, தரமான விதைநெல் உற்பத்தியை மேற்கொள்வதற்கும் தானிய உற்பத்திக்கெனவும் பி.ஜி 360 ரக விதைநெல்லும், பல்லாண்டு பயிர்களின் கீழ் பழச்செய்கையை மேற்கொள்வதற்கென அன்னாசி உறிஞ்சிகளும், அடர்முறையில் மாமர செய்கையை மேற்கொள்வதற்கென நல்லின கறுத்த கொழும்பான்  மாமர  கன்றுகளும், விவசாய வனவியலை  ஊக்குவிக்கும் நோக்கத்தோடு தென்னை, மா, மாதுளை போன்;றவையும், பசுந்தாட்பசளை பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில் சணல்விதைகளும், காளான் செய்கைக்கு பயன்படுத்தப்படும் உபகரண தொகுதிகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

மேலும், வெங்காயத்தை சேமித்து வைக்கும் கொட்டில்களை அமைப்பதற்கென வெங்காய உற்பத்தியாளர்கள் ஐந்து பேருக்கு தலா 50,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மன்னார் மாவட்டப் பிரதி விவசாய பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் பிறமூஸ் சிராய்வா, விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம். ஹால்தீன், மாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .