2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் 1800 வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

  -எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் சுகாதார திணைக்களத்தினால் கடந்த 26,27 ஆம் திகதிகளில் மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பிரதேசங்களிலுள்ள 5 ஆயிரம் வீடுகளில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது,1800 வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் சூழல் காணப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.றோய் பீரிஸ் தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் நகரசபைக்குட்பட்ட  பகுதிகளிலுள்ள கிராமங்கள், பரிசோதனை செய்யப்பட்டு டெங்கு இல்லாத மன்னார் நகரை உருவாக்கும் முதற்கட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுசரனையுடன் குறித்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 1800 வீடுகளில் நுளம்பு பரவும் சூழல் உள்ள இடங்கள் இனங்காணப்பட்டதோடு அவற்றில் 75 சவீதமான வீடுகள், உடனடியாக துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

இதேவேளை, ஏனைய வீட்டு உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 03ஆம் 04ஆம் திகதிகளில் வடமாகாண விசேட டெங்கு ஒழிப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்ட குறித்த வீடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பரிசோதனையின் போது இனங்காணப்பட்ட வீடுகளில் மீண்டும் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படும் பட்சத்தில், குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.றோய் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .