2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 2,000ற்கும் அதிகம்

George   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2792 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 1434 மாற்றுத்திறனாளிகளும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 250 மாற்றுத்திறனாளிகளும், பூநகரி பிரதேச செயலக பிரிவில் 516 மாற்றுத்திறனாளிகளும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 592 மாற்றுத்திறனாளிகளும் வசித்து வருவதாக அந்த புள்ளி விபரத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கிளிநொச்சியிலுள்ள மாற்றுத்திறனாளிகளில் தெரிவு செய்யப்பட்ட 50 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் தலா 3000 ரூபாய் வீதம் உதவி கொடுப்பனவுகள் சமூக சேவைகள் அமைச்சால் வழங்கப்படுகின்றன. மேலும், மிகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் 250 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரையான உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. 

அத்துடன், சமூக சேவை அமைச்சின் வீடமைப்பு திட்டத்தில் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு வருகின்ற போதும், இதனை விட இந்திய வீட்டுத்திட்டத்தின் பெறுமதி அதிகமாக (5 இலட்சத்து 50 ஆயிரம ரூபாய்) இருப்பதால் பயனாளிகள் இந்திய வீட்டுத்திட்டத்தை தெரிவு செய்கின்றனர்.

இது தவிர அமைச்சால் வீடுகள் திருத்துவதற்கு ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா 65 ஆயிரம் ரூபாய்  படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றது. 

உலக வங்கியின் 55 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் மாற்று திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு 6 மாதகால பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவற்றை விட அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டர் அமைப்புக்கள் மற்றும் நலன்விரும்பிகள் மூலமும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .