2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பட்டதாரிகள் 250 பேருக்கு நிரந்தர நியமனங்கள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 05 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 250  பட்டதாரிகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை நிரந்தர நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் பட்டதாரிகள் பயிலுநர் தரத்தில் அரசாங்க  சேவையில் உள்வாங்கப்பட்டு இதுவரை காலமும் பல்வேறு திணைக்களங்களிலும் பயிலுநர்களாக கடமையாற்றிவந்த 250 பட்டதாரிகளுக்கே நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக மேற்படி நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர்  சரஸ்வதி மோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X