2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கிளி, முல்லை., வவுனியா மாவட்டங்களில் வெள்ளத்தால் 2,635 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுகந்தினி)

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வெள்ளத்தால் 782 குடும்பங்களைச் சேர்ந்த 2,635 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்னங்கட்டி  பகுதியில்  வெள்ளத்தால் 13 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்டத்தின் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களது வீடுகளை விட்டு இன்று திங்கட்கிழமை வெளியேறிய இம்மக்கள் பன்னங்கட்டி  அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டுவருவதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இரணைமடுக்குளத்தின் 10 வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ள நிலையிலும்  வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வெள்ளத்தாலுமே பன்னங்கட்டிப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் அவ்வப்போது சிறியளவில் மழை பெய்துவருவதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 571 குடும்பங்களைச் சேர்ந்த 1,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 230 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 214 குடும்பங்களைச் சேர்ந்த 649 பேரும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 290 குடும்பங்களைச் சேர்ந்த 979 பேரும் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வவுனியில் 198 குடும்பங்களைச் சேர்ந்த 722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வவுனியா தெற்கில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேரும் வவுனியா செட்டிகுளத்தில் 173 குடும்பங்களைச் சேர்ந்த 639 பேரும் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X