2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மடுக்கரையைச் சேர்ந்த 30 குடும்பங்கள் தொடர்ந்து இடைத்தங்கல் முகாமில்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 06 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


அண்மையில் பெய்த கடும் மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மன்னார், மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்கள் தொடர்ந்தும் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை கிராம மக்கள் கடும் மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்து  மடுக்கரை ம.வி. பாடசாலையில் தங்கியிருந்தனர்.

தற்போது இக்கிராமத்தில் வெள்ளம் வடிந்தோடிய  நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வீடுகளுக்கோ அல்லது உறவினர்களின் வீடுகளுக்கோ திரும்பிச் சென்றுள்ளனர். ஆனால் சுமார் 30 குடும்பங்கள்வரை தொடர்ந்தும் இப்பாடசாலையில் தங்கியுள்ளதாக மடுக்கரை கிராம அலுவலகர் தெரிவித்தார்.

தங்களது வீடுகள் தற்போதும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாக மடுக்கரை ம.வி. பாடசாலையில் தங்கியுள்ள இம்மக்கள் தெரிவித்தனர்.
தாம் தொடர்ந்தும் இப்பாடசாலையிலேயே தங்கியுள்ளதாகவம் அடிப்படை வசதிகளின்றியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இது இவ்வாறிருக்க இப்பாடசாலையிலுள்ள இம்மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது மீண்டும் வீடுகளுக்குச் செல்லமுடியாத நிலையிலுள்ள எங்களை,  உடனடியாக பாடாசாலையை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர். தற்போது இங்கு அடிப்படை வசதிகளின்றி உள்ளோம். எங்களில் பலருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களை தொடர்ந்து சில தினங்களுக்கு இப்பாடசாலையிலேயே தங்கவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மடுக்கரை பாடசாலையில் தங்கியுள்ள இம்மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரினர்.

இப்பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் உரிய கிராம அலுவலகரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

நிலைமையை அவதானித்து தொடர்ந்து பாடசாலையில் அல்லது பொதுமண்டபமொன்றில் இம்மக்களை தங்கவைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் அதிகாரிகள் கூறினர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X