2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பாதிக்கப்பட்ட 459 பேருக்கு உதவித்தொகைகள்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் புனர்வாழ்வு அதிகார சபையால் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 459 பேருக்கு உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 12 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த உதவித்தொகைகளை பயனாளிகளிடம் கையளிக்கவுள்ளார்.

யுத்தத்தால் கடுமையாக பாதிக்குட்பட்டவர்களுக்கான தலா 1 இலட்சம் ரூபா நிதியுதவியை கண்டாவளை பிரதேச செயலகத்தை சேர்ந்த 141 பேரும் கரைச்சி பிரதேச செயலகத்தை சேர்ந்த 125 பேரும் பூநகரி பிரதேச செயலகத்தை சேர்ந்த 52 பேரும் மற்றும் பளை பிரதேச செயலகத்தை சேர்ந்த 16 பேரும் பெறவுள்ளனர்.

அதேவேளை, அரச உத்தியோகத்தர்களுக்கான நட்;டஈட்டு கொடுப்பனவான தலா 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தொகையை கண்டாவளை பிரதேச செயலகத்தை சேர்ந்த 12 பேர், கரைச்சி பிரதேச செயலகத்தை சேர்ந்த 47 பேர், பூநகரி பிரதேச செயலகத்தை சேர்ந்த 11 பேர் மற்றும் பளை பிரதேச செயலகத்தை சேர்ந்த 11 பேர் பெறவுள்ளனர்.

சாதாரண பொதுமக்களுக்கான இழப்பீட்டு தொகையை கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 3 பேரும், கரைச்சி பிரதேச செயலக 37 பேரும், பளை பிரதேச செயலக பிரிவை சேர்ந்த 4 பேரும் பெறவுள்ளனர்.

மேலும், யுத்தத்தால் பாதிப்புற்ற ஆலயங்களுக்கான இழப்பீட்டுத்தொகையான தலா 1 இலட்சம் ரூபாவை கண்டாவளையை சேர்ந்த 2 ஆலயங்களும், பூநகரி, பளை, ஆகிய இடங்களிலுள்ள தலா 1 ஆலயங்களும் பெறவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .