2025 ஜூலை 26, சனிக்கிழமை

பொன்தீவுக்கண்டல் கிராமத்தில் 46 முஸ்ஸிம் குடும்பங்களின் காணிப் பிரச்சினைக்கு இணக்கப்பாடு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 28 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பொன்தீவுக்கண்டல் கிராமத்தில் 46 முஸ்ஸிம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணி தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலைமை சமரசப் பேச்சுவார்த்தையின் பின்னர் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

மேற்படி 46 முஸ்லிம் குடும்பங்களுக்கும் பொன்தீவுக்கண்டல் கிராமத்திலேயே வசிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. 

பொன்தீவுக்கண்டல் கிராமத்தில் 46 முஸ்லிம் குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டன. இதற்கு பொன்தீவுக்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள்  எதிர்ப்புத் தெரிவித்ததினால் முறுகல் நிலைமை ஏற்பட்டது.

பொன்தீவுக்கண்டல் கிராமத்தில் 46 முஸ்லிம்  குடும்பங்களுக்கு நானாட்டான் பிரதேச செயலகத்தின் ஊடாக காணிகள் ஒதுக்கப்பட்டு அந்த மக்கள் தங்களது காணிகளில் வீடுகளை அமைக்கும் ஆரம்பப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கு பொன்தீவுக்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள்  எதிர்ப்புத் தெரிவித்ததினால்  வீடுகள் அமைக்கும்  வேலைத்திட்டங்கள் கைவிடப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.சந்திரையா, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் பொன்தீவுக்கண்டல் கிராம மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து பொன்தீவுக்கண்டல் கிராமத்தில் முஸ்ஸிம் மக்களுக்கு வழங்கப்பட்ட காணி தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலைமை சமரசப் பேச்சுவார்த்தையின் பின்னர் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் பொன்தீவுக்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட  46 முஸ்லிம் குடும்பங்களும் பூவரசங்குளம் பகுதியில் உள்ள உறவினர்களுடைய வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்தக் குடும்பங்கள்  வீடுகளை  அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும்  திரும்பும் தறுவாயில் உள்ளது. இந்தக் குடும்பங்களும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

46 முஸ்லிம் குடும்பங்களுக்குமான வீட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். பொன்தீவுக்கண்டல் கிராமத்தில் தமிழ், முஸ்ஸிம் என்ற பாகுபாடுகள் எவையும் இன்றி அந்த மக்களுக்கு சகல உதவிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்  தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X