2025 ஜூலை 26, சனிக்கிழமை

வடமாகாண சுகாதார சேவைக்கு ரூ.5,300 மில்லியன் செலவு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சிவகருணாகரன்

போர் முடிந்த பின்னர் கடந்த 04 வருட காலத்தில் மட்டும் வடக்கு மாகாண சுகாதார சேவைக்காக 5,300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் க.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இவற்றில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு மட்டும் 1,500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று செவ்வாய்க்கிழமை  பளை பிரதேச மருத்துவனை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்தத்தினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சுகாதார சேவையை மீளக்கட்டியெழுப்புவதற்காக கடந்த 04 வருடங்களில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக 5,300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, பூநகரி வைத்தியசாலையின் கட்டட நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவுற்றுள்ளதாகவும் மிக விரைவில் அந்த மருத்துவனையைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வேரவில் வைத்தியசாலை, அக்கராயன் வைத்தியசாலை என்பனவும் புனரமைக்கப்பட்டு வருவதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் வட மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X