2025 ஜூலை 26, சனிக்கிழமை

கிளி. கல்வி வலயத்தில் சுமார் 640 மாற்றுத்திறனாளி மாணவர்கள்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி கல்வி வலயத்தில் சுமார் 640 வரையான  மாணவர்கள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளபோதிலும்,  அவர்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு ஏற்ற வசதிகள் இல்லையென கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையின் விசேட கல்விப் பிரிவின்  ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தின அனுஷ்டிப்பு நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கிளிநொச்சி கல்வி வலயத்தில் சுமார் 640 வரையான  மாணவர்கள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களில் 60 வரையான மாணவர்கள் முறைசாராக் கல்விப்பிரிவில் இணைக்கப்பட்டு  அதன் மூலம் விசேட கல்வி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அடுத்த வாரம் முதல் நவீன வசதிகளைக் கொண்ட கற்றல் அலகு நிலையமொன்று இங்கு திறந்து வைக்கப்படவுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது கல்வியை இலகுவாக கற்றுக்கொள்ளமுடியுமெனவும் அவர் கூறினார்.

மேலும், மாற்றுத்திறனாளி  மாணவர்களை தாங்கள் குறைத்துப் பார்க்கவில்லை. அவர்களையும் ஏனைய மாணவர்களைப் போன்றே பார்க்கின்றோம் எனவும் அவர் கூறினார். 

இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரி த.சத்தியமூர்த்தி,  அருட்தந்தை யாவிஸ் அடிகளார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் சி.சிவமாறன், கல்வி துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X