2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை

Niroshini   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாகக் காணப்படும் ஊற்றுப்புலம் கிராமத்தில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் சுமார் 420இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இவர்கள் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலளர் பிரிவின் கீழுள்ள ஊற்றுப்புலம் கிராமத்தில் தற்போது 420இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

கிளிநொச்சி நகரிலிருந்து 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ள குறித்த கிராமத்திகான பிரதான வீதி புனரமைக்கப்படாமல் காணப்படுவதனால் இவ்வீதியைப் பயன்படுத்துவதில் இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதாவது பாடசாலை மாணவர்கள் தமது மேலதிக கல்வி வசதிகளைப் பெற்றுக் கொள்வது மற்றும் பொதுச்சந்தைக்கான தேவைகள், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப்பெற்றுக் கொள்வதற்கு வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், குறித்த கிராமத்துக்கான பிரதான வீதி இன்று வரை புனரமைக்கப்படாமல் காணப்படுவதனால் இவ்வீதியைப்பயன்படுத்துவதில் இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .