2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'40 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்னும் மாற்றமில்லை’

George   / 2016 நவம்பர் 08 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -நடராசா கிருஸ்ணகுமார்  

“முல்லைத்தீவு, கடற்றொழிலாளர்களின் படகுகளையும், உபகரணங்களையும் நவீன முறைக்கு மாற்றுவதன் ஊடாகவே, மீன்பிடியில் முன்னேற்றம் ஏற்படும்” என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, நேற்றுத் தெரிவித்தார்.  

“40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொழில் முறையையே தற்போதும் கையாள்கின்றோம். எமது படகுகளின் இயந்திரவலு அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கான அனுமதிகள் உள்ள போதும் இயந்திரங்களை பொருத்தக்கூடிய பொருளாதார நிலை கடற்றொழிலாளர்களிடம் இல்லை. இதனால், 40 கடல் மைல் தூரம் வரையில் சென்று தான் மீன்பிடியில் ஈடுபடுகின்றோம்.   

இயந்திரவலு அதிகரிக்கப்பட்டு, ஜி.பி.எஸ் போன்ற கருவிகள் படகுகளில் பொருத்தப்படும் போது, 100 மைல் தூரம் வரையில் சென்று தொழிலில் ஈடுபடக்கூடிய நிலைமை ஏற்படும்.  

பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், நவீன படகுகள் உபகரணங்களைப் பயன்படுத்தித்தான் எமது கடல் பகுதிக்கு வந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள். எங்களிடம் தொழில் வல்லமை அதிகரிக்கும் போது தான் எமது பொருளாதார பலமும் அதிகரிக்கும்” என அவர் மேலும் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .