2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

53 இந்தியன் வீடுகள் கட்டப்படவில்லை

Gavitha   / 2016 நவம்பர் 05 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா மாவட்டத்தில் வழங்கப்பட்ட 4 ஆயிரத்து 756 இந்திய வீடுகளில் 53 வீடுகள் கட்டப்படாத நிலையில் காணப்படுகின்றன.

நான்காயிரத்து 756 வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 53 வரையான வீடுகள் கட்டப்படாத நிலையில் காணப்படுகின்றன.

அதாவது வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேசத்தில் 18 வீடுகளும், வவுனியா தெற்குப் பிரதேசத்தில் 10 வீடுகளும், வவுனியா பிரதேசத்தில் 11 வீடுகளும், செட்டிகுளம் பிரதேசத்தில் 14 வீடுகளும் என 53 வீடுகள் அமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.

இதனால் இந்த 53 வீடுகளுக்குமான நிதி, திரும்பிச் செல்லும் நிலை காணப்படுகின்றது. இந்த வீடுகளை விரைவாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் பிரதேச செயலளர்கள், கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

வழங்கப்பட்ட 4 ஆயிரத்து 756 வீடுகளில், 4 ஆயிரத்து 404 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 299 வீடுகளின் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .