Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
தனியார் பேரூந்துக்கு 60 வீத சேவையும் இலங்கை போக்குவரத்து சபைக்கு 40 வீத சேவையும் வழங்கியிருப்பதுடன் இன்று இலங்கை போக்குவரத்துசபை சிறந்த சேவையை வழங்கின்றது. இந்நிலையில், 50 க்கு 50 என்ற வீதத்தில் பேரூந்து சேவை இடம்பெற்றால் மாத்திரமே இணைந்த நேர அட்டவணைக்கு ஒத்துழைப்போம் என வட மாகாண இலங்கை போக்குவரத்துசபையின் இணைந்த தொழிற்சங்கம் இன்று சனிக்கிழமை (10), தெரிவித்துள்ளது.
வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்தும் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில்,இவ்வட்;டவணையானது,வவுனியா யாழ்ப்பாணம், வவுனியா மன்னார், மன்னார் யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் முல்லைத்தீவு போன்ற சில பாதைகளுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தொழிலாளர்களின் வேதனத்தை கூட சீராக பெற்றுக்கொள்ளமுடியாமல் இருந்தது. எனினும் கடந்தகால வரலாற்றை தோற்கடித்து தற்போது நல்ல நிலையில் இயங்கி வருகின்றோம்.
ஆனால் தற்போது வட மாகாணசபையினால் ஒரு பாதையில் மேற்படி, அட்டவணையினால் எமது சாலைக்கு வருமான வீழ்ச்சி ஏற்படும்போது 2500 மேற்பட்ட எமது குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாகின்றது. அத்துடன் பருவகால சீட்டு பெற்று உரிய நேரத்துக்கு செல்லவேண்டிய மாணவர்கள், உத்தியோகத்தர்களின் பயணங்களிலும் தாமதம் ஏற்படும்.
முன்னார் நாங்கள் இயங்கிய நேர அட்டவணைப்படி தனியாரும் இயங்க ஆரம்பித்துள்ளது. அத்துடன் தனியார் பேரூந்துகள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களுக்கு நேர அட்டவணை தயாரிக்கப்படவில்லை.
எனவே, ஏனைய இடங்களைப்போல் 50 இற்கு 50 இற்கு என்ற வீதத்தில் சேவையில் ஈடுபடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டால் மாத்திரமே, நாம் இணைந்த நேர அட்டவணைக்கு ஒத்துழைப்போம்.
அத்துடன் பிராந்திய முகாமையாளர், பிராந்திய செயலாற்று முகாமையாளர், சாலை முகாமையாளர்களுக்கு நாம் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புவதாவது உங்கள் பதவிக்காகவோ வேறு பதவிக்காகவோ தொழிற்சங்கத்தின் அனுமதியின்றி இணைந்த சேவைக்கு கையொப்பமிட்டால் பதவிகளில் இருக்கமுடியாது என்பதுடன் வட மாகாணத்தில் எந்த சாலையிலும் நீங்கள் பணியாற்ற நாம் அனுமதிக்கப்போவதில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
2 hours ago