2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

இறுதிச்சடங்கு; அரசியல் கைதியை அழைத்து வர ஏற்பாடு

George   / 2017 மே 17 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மெகசின் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தந்தை, நேற்று, உயிரிழந்துள்ளார்.

தந்தையின் இறுதி கிரிகைகளில் கலந்து கொள்ளுவதற்காக, அரசியல் கைதியை அழைத்து வர, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மத்திய வங்கியில் இடம் பெற்ற குண்டு வெப்பு சம்பவம் தொடர்பாக மெகசின்  சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும்,  யாழ். பண்டத்தரிப்பை சேர்ந்த விக்னேஸ்வரன் பார்த்தீபன் என்பவரின் தந்தையான விக்னேஸ்வரனே உயிரிழந்துள்ளார்.

தந்தையின் இறுதிக்கரியைகளில் கலந்து கொள்ள  அரசியல் கைதிக்கு அனுமதிப் பெற்றுக்கொடுக்குமாறு, உறவினர்களால் செல்வம் அடைக்கலநாதனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்து.

இந்நிலையில், சிறைச்சாலை அமைச்சர் சுவாமிநாதனுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியதையடுத்து, அரசியல் கைதி, தனது தந்தையில் இறுதிக்கரியைகளில் கலந்துகொள்ள   ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என, செல்வம் எம்.பி மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .