2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

6, 625 ஏக்கரில் காலபோக நெற்செய்கை

Niroshini   / 2016 ஒக்டோபர் 20 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 10 குளங்களின் கீழ் இம்முறை காலபோக நெற்செய்கையில் 6,625 ஏக்கரில் நெற்செய்கை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனிக்குளம், ஐயன்கன்குளம், பழையமுறிகண்டிக்குளம், மருதங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், தென்னியங்குளம், கல்விளான்குளம், தேராங்கண்டல்குளம் மற்றும் மல்லாவிக்குளம் ஆகிய குளங்களுக்கான காலபோக நெற்செய்கைக் கூட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

காலபோக நெற்செய்கை கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விதைப்புக் காலமாக எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வரையில் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை புழுதி விதைப்புக்கான மழை பொழியாத நிலையில் காலபோக நெற்செய்கைக் கூட்டங்கள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .