2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'கிராமங்கள் உவரடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்'

George   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

'முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவில் உவரடைந்து வரும் இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய கிராமங்களைப் பாதுகாப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளும் அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை' என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியிலுள்ள உவர் ஆற்றிலிருந்து, மழை காலத்தில் உவர்நீர் கிராமங்களுக்குள் புகுந்து கொள்வதனால், நன்னீர் கிணறுகள் உவர் நீராக மாறிவருகின்றன. மேலும், தென்னை, பலா போன்ற பயன்தரு மரங்களும் அழிவடைந்து வருகின்றன.

'இது தொடர்பாக, புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், உவர் நீர்ப்பரம்பலைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை' மக்கள் கூறுகின்றனர்.

கிராமங்கள் உவரடைந்தால் எதிர்காலத்தில் இடம்பெயர வேண்டிய அவலம் உருவாகும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .