Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
குற்றம் புரிந்தவர்கள் அரசாங்கத்துடன் இன்றும் இணைந்திருக்கின்ற நிலையில், குற்றம் புரியாதவர்கள் சிறைவாசம் அனுபவிப்பது என்பது உலக நீதிக்கு புறம்பானது' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'அரசாங்கம் காலக் கெடுகளைச் விடுக்கின்றது. நல்லாட்சி பற்றிப் பேசுகிறது. இந்த அரசாங்கம் அமைவதற்கு நல்லெண்ணத்துடனும் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நோக்கத்துடனும் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான முழு ஆதரவை இவர்கள் வழங்கி இருந்தார்கள்.
இதுவரை, அரசியல் கைதி ஒருவருக்குகூட பொது மன்னிப்பு வழங்கி, விடுவிக்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை. ஜே.வி.பி நடத்திய மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கூடக் கட்டுப்படுத்திய அரசாங்கம், அவர்களை மூன்று ஆண்டுகளுக்குள் தனது இனம் என்ற வகையில், தனது அரசியல் நலன் கருதி விடுதலை செய்திருந்தது.
தமிழர் என்ற காரணத்துக்காக தமிழ் பிள்ளைகள் சிறையில் வதைக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள்' எனவும் கூறினார்.
முன்னதாக, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
'எதிர்கட்சித் தலைவரே, கைதிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எங்கே?', 'அரசியற் கைதிகளின் விடுதலையே நல்லிணக்கத்தின் முதற் புள்ளி'. 'பிள்ளைகள் சிறையில் வாட, பிறக்குமா நல்லிணக்கம்?', 'இருபது வருடங்களாக இரும்பு சிறைவாழ்வு, இதுதான் தமிழர்களுக்கு நீதியா?' போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு இவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், சமூக அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago