Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
'2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கிளிநொச்சி மாவட்டம், போசாக்கு மட்டத்தில் கடைசி மாவட்டமாக காணப்பட்டது. ஆனால், தற்போது அதிலிருந்து முன்னேறிச் செல்கிறது. இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாது. இருந்தும் மாவட்டத்தின் போசாக்கு மட்டத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது' என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மைதிலி தெரிவித்துள்ளார்.
போசாக்கு தொடர்பான தேசிய வேலைத்திட்ட முன்னேற்ற பரிசீலனை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'போசாக்கு மட்டத்தை உயர்த்தும் வேலைத்திட்டம், தனியே வைத்திய துறையை மட்டும் சார்ந்தது அல்ல விவசாயதுறை, மீன்பிடி துறை, கல்வித்துறை, ஊடகத்துறை என பல்துறைகளின் இணைந்த ஒரு குழு வேலைத்திட்டம். இங்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படும் போதே போசாக்கு மட்டத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்ற ஒரு சூழல் நிலவுகிறது' என்றார்.
'இலங்கையை பொறுத்தவரை ஜந்து வயதிற்குட்பட்ட 0.2 மில்லியன் சிறுவர்கள் வயதிற்கேற்ற வளர்ச்சி இன்றியும், 0.3 மில்லியன் சிறுவர்கள் வயதிற்கேற்ற நிறையின்றியும், சுமார் 4 மில்லியன் மக்கள் தாதுபொருள் ஊட்டச் சத்துக் குறைவாலும், மூன்றில் ஒரு பெண் அதிக எடையுடனும் காணப்படுவதாக 2012 புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறன' எனவும் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் போசாக்கு மட்டத்தை உயர்த்தும் வகையில் கிராம மட்டம், பிரதேச செயலக மட்டம், மாவட்டம் மட்டம் என அனைத்து நிலைகளிலும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்' எனவும் மைதிலி வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன், திட்டப்பணிப்பாளர் மோகனபவன், பிரதேச செயலாளர்கள், சுகாதார துறை அதிகரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
2 hours ago