2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் ஆசிரியர் பற்றாக்குறை

George   / 2016 மே 24 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட பெரும்பாலான பாடசாலைகளில், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்களுக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை நிலவி வருவதாக வலயக் கல்வி நிர்வாகம் தெரிவிக்கின்றது.

கிளிநொச்சி கல்வி வலயத்திலுள்ள 104 பாடசாலைகளில் 32,245இற்கும் மேற்பட்ட மாணவர்;கள் கல்வி கற்று வருகின்றனர். ஆரம்பக் கல்விப் பிரிவுக்கு போதிய ஆசிரியர்கள் உள்ள போதும், முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்  வெற்றிடங்கள் இன்று வரையும் நிரப்பப்படவில்லை. இதனால், பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்;படுவதாக மாணவர்களின் பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி வலயக்கல்வி பணிமனை நிர்வாகத்திடம் தொடர்புகொண்;டு கேட்டபோது, 'கிளிநொச்சி கல்வி வலயத்தின்;; கீழுள்ள பாடசாலைகளின் ஆரம்பப்;பிரிவில் நிலவிய ஆசிரியர்கள் பற்றாக்குறைகள் தற்போது தீர்;க்கப்பட்டுள்ளன' என்றார். 

'உயர்தர வகுப்புக்களுக்கான பாட ரீதியான ஆசிரியர் பற்றாக்;குறை தொடர்ந்து காணப்படுகின்;றது. குறிப்பாக கணிதம், விஞ்ஞானம் ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவே காணப்படுகின்றது. இவற்றை நிவர்த்தி செய்வதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகின்றது' எனவும் நிர்வாகம் கூறியது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X