Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 03 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள ஒதியமலைக் கிராமத்தில் காணப்படும் கருவேப்பமுறிப்பு, செம்பிக்குளம், பளையமுறிப்பு மற்றும் தனிக்கல்லுக்குளம் ஆகிய நான்கு குளங்களையும், விரைவாக புனரமைத்து தருமாறு, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 1984ஆம் ஆண்டு, ஒதியமலை பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவமொன்றை அடுத்து, அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துச் சென்றனர். அதன் பின்னர் அவர்கள், மீண்டும் கடந்த 2010ஆம் ஆண்டின் பின்னரே, மீள்குடியேறினர்.
தமது வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தை மேற்கொள்ளும் வகையில், இக்குளங்களைப் புனரமைத்துத் தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், அப்பகுதியில் பயிர்ச் செய்கைகளை பாதுகாப்பது முதல், இரவு வேளைகளில் வீடுகளில் இருக்க முடியாத அளவுக்கு, காட்டு யானைகளின் தொல்லையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதனை கட்டுப்படுத்துவதற்கு, மின்சார வேலிகள் அமைத்துத் தரவேண்டும் என்றும், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
07 Jul 2025
07 Jul 2025