2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'குழிகளுக்கு அருகில் சிறுவர்களை அனுமதிக்காதீர்கள்'

Gavitha   / 2016 நவம்பர் 24 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில், மழை வெள்ளம் தேங்கியுள்ள இடங்களிலும் குழிகள் காணப்படும் இடங்களிலும், சிறுவர்களைச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று கிளிநொச்சி சுகாதார திணைக்களத்தினரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வீடு வீடாகச் செல்லும் குடும்பநல மருத்துவ மாதுக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், மழை காலத்தில் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.

'மீள்குடியேற்றத்தின் போது, ஒவ்வொரு வீட்டுத்திட்டத்துக்குமாக தோண்டப்படும் குழிகளில், தற்போது  மழை நீர் தேங்கியுள்ளது. இதனைக் காணும் சிறுவர்களுக்கு அதற்குள் இறங்கி விளையாடுவதற்கு எண்ணம் தோன்றும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம், உயிராபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.

குறிப்பாக மீள்குடியேற்றத்தின் பின்னர் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட குழிகளில் தற்போது மழை வெள்ளம் தேங்கி நிற்கின்றது. சிறுவர்கள் அக்குழிகளை நாடிச்சென்று விளையாட்டுக்களில் ஈடுபடக் கூடும்.

இதேபோன்ற சம்பவங்கள் கடந்த மழைக்காலங்களில் இடம்பெற்றுள்ளது. எனவே, இவ்வாறான பகுதிகளுக்கும் வான் வெள்ளம் பாயும் பகுதிகளுக்கும் சிறுவர்களை அனுமதிக்க வேண்டாம்' என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .