2025 ஜூலை 05, சனிக்கிழமை

'கடன் அறவிட 5 மணிக்குப் பிறகு செல்லக்கூடாது'

George   / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் அதனை அறவிடுவதற்காக மாலை 5.00 மணிக்குப் பின்னர், பயனாளிகளின் வீடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் அவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்குமிடத்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்;கப்படும் என கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

பால் மற்றும் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பான மாவட்டமட்டக் கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் வியாழக்கிழமை (04) நடைபெற்றது.

நுண்கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்கள் வருமானம்,அடிப்படைத்தகமைகளை கருத்திற்கொள்ளாது அதிக கடன்களை வழங்கி விட்டு அவற்றை அறவிடுவதற்;கு அதன் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கடன்களை கட்டுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக கடன்களை அறவிடுவதற்;கு நேரகாலம் கவனத்தில் கொள்;ளப்படாது மாலை 5 அல்லது 6 மணி வரையும் விடுகளில் வந்து துன்புறுத்துகின்றனர் என்றும் கிராம பொது அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவுக்கும் இது தொடர்;பான முறைப்பாடுகள் கடந்த வாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் அதிகாரி  குறிப்பிட்டிருந்தார்

இவ்வாறான கடன்களால் குடும்ப வன்முறைகள் கூட காணப்படுகின்றன எனத்தெரிவிக்கப்;பட்டது.

இதற்குப் பதிலளித்த மாவட்டச் செயலாளர், 'பல்வேறுபட்ட நிதி நிறுவனங்கள் கடன்களை வழங்கி விட்டு அவற்றை அறவிடுவதற்கு மத்திய வங்கியின் அறிவுறுத்;தல்களை பின்பற்றாது இவ்வாறு மாலை 5.00 மணிக்கு பின்னர் அவர்களது வீடுகளுக்கு சென்று அவர்களை துன்பப்படுத்தி வருகின்றமை தொடர்பில் உரிய பொலிஸார் மற்றும் அதிகாரிகள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.சத்தியசீலன், பொலிஸார், வங்கி உத்தியோகத்தர்கள், துறைசார் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .