Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 08 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
“எமது சிகையலங்கரிப்பு நிலையங்களை மூடினால், வடக்கில் பலர் தாடி வளர்த்து திரிவார்கள். எனவே, இராணுவம் நடத்தும் சிகையலங்கரிப்பு நிலையங்களை மூடிவேண்டும்” என வடக்கு சிகையலங்கரிபபாளர் சங்கத்தின் தலைவர் க. நாகராசா தெரிவித்தார்.
வவுனியா முத்தையா மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட சிகையலங்கரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்திலேயே அவர் இன்று இவ்வாறு தெரிவித்தார்.
“வவுனியா மாவட்டததில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு தொழிலை செய்து எமது தொழிலை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளார்கள். இவ்வாறான பிரச்சனை எம்மை வெகுவாக பாதித்துள்ளது.
இராணுவத்தின் எல்லைப்பரப்பிலே சிகை அலங்கரிபபு நிலையங்களை அமைத்து அங்கே தொழில் புரிந்து வருகினற்னர். வவுனியா மாவட்டத்தில் பம்பைமடு, மாந்தை மேற்கு, கிளிநொச்சி பூநகரி, கண்டாவளை, ஓமந்தை, நாம்பன்குளம், பள்ளமடு ஆகிய இடங்களில் இவ்வாறான தொழிலை செய்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான முறைபபாடுகள் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. அங்குள்ள இராணுவத்தினர் தமது இராணுவத்தினருககு மாத்திரமே இத் தொழிலை செய்து வருகின்றனர். ஆனால், மேற்படி இடங்களில் இராணுவததினருடன் எமது வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த கட்டணங்களில், விடுமுறை தினங்களிலும் சிகை அலங்கரிப்பு தொழிலை செய்து வருகின்றனர். இது எமது வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயற்பாடாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago