2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

‘தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு’

Princiya Dixci   / 2017 மே 14 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது பற்றித் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு, அரசாங்கத்துக்கு உண்டு” என, சென். ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் சேவை நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் மனித நேய செயற்பாட்டாளருமான ஏ.எல்.மீராசாகிப் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி, வவுனியாவில் தொடர்ச்சியாக சத்தியாக்கிரகம் இருந்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை, நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், போராட்டத்திலும் பங்கேற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவிதார்.

“காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகளையும் உறவினர்களையும், அரசாங்கம் கண்டுபிடித்துத் தரவேண்டும். இல்லையேல், எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை, அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்” என, சத்தியாக்கிரகம் இருந்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதன்போது, தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களின் நிலைகளைக் கேட்டறிந்த பின்னர் கருத்து தெரிவித்த மீராசாகிப்,

“உங்களின் போராட்டம், நியாயமானது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு, அரசாங்கத்துக்கு உண்டு.

“சுட்டெரிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் தமது உறவினர்களைத் தேடி, இந்த தாய்மாரும் சகோதரிகளும், தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியான சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“இவர்களின் வேண்டுகோளை, எமது அமைப்பினூடாகவும் உரிய தரப்புகளுக்குக் கொண்டு செல்வோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .