2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'நல்லாட்சி அரசாங்கமும் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது'

Niroshini   / 2017 மே 06 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துங்கள், உங்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று எங்களது பிரதிநிதிகள் சொன்னார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. எங்களால் உருவான நல்லாட்சி அரசாங்கமும் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது என, இரணைத்தீவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை(06) நாளாகவும் சொந்த நிலத்துக்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் இரணைத்தீவு மக்கள், தாங்கள் தாங்கள் மீண்டும் ஊருக்குச் செல்லும் வரை போராட்டத்தில் ஈடுப்பட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன் போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களின் கணவனை இழந்த  பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது,

“தாங்கள் ஊரில் (இரணைத்தீவில்) இருந்த காலத்தில் காலையில் அறு மணிக்கு கடலுக்குச் சென்றால் ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவோம், அதற்கிடையில் எங்களுக்கு கிடைக்கின்ற வருமானம் வாழ்க்கைச் செலவை கொண்டு நடத்த போதுமானதாக இருக்கும், நான்கு வகையான தொழிலை செய்து வந்தோம். ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை.  மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழ்கின்றோம். சாப்பிட்டுக்கே போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், வளமாக வாழ்ந்த ஊருக்கு (இரணைத்தீவுக்கு) செல்ல வேண்டும் மீண்டும் வளமான வாழ்க்கையை வாழ வேண்டும். எங்களது வாழ்க்கைதான் கடைசி காலத்தை எட்டிவிட்டது. எங்களது பிள்ளைகளின் வாழ்ககையாவது நிம்மதியானதாக அமைய வேண்டும். அதற்கு நாங்கள் ஊருக்குத் திரும்ப வேண்டும்எனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .