Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு கொக்குளாய் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு, பொலிஸாரும், இராணுவமும் ஆதரவு வழங்கி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக எந்தவொரு பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்பிடித்துறை, நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர,வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றில் உறுதியளித்த நிலையிலேயே, துரைராசா ரவிகரன், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.
கொக்குளாய் பகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மீன்பிடியால் முல்லைத்தீவு மீனவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் துரைராசா ரவிகரன், கடற்தொழில் திணைக்களத்தாலும் பொலிஸாராலும் அவர்களை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவில் முகாமிட்டு மீன்பிடியில் ஈடுபட்டுள்ள புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மீனவர்கள் கடந்த 17 ஆம் திகதி, தமிழ் மீனவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதில் இரண்டு மீனவர்கள் காயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர்.
இந்தநிலையில், முல்லைதீவு மற்றும் திருகோணமலை பொலிஸாரும் இரண்டு பகுதி மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில், மூன்று நாட்களுக்கு முன்னர் சந்திப்பொன்று இடம்பெற்றதுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த அறிவுறுத்தலையும் மீறி வௌ்ளிக்கிழமை மாலை ஆயிரம் படகுகளில் வந்த புல்மோட்டை மீனவர்கள், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தன்னிடம் முறையிட்டதாக வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago