Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
'பரவிப்பாஞ்சான் மக்களின் காணி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும்' என, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
ஜந்தாவது நாளாக, நேற்று ஞாயிற்றுக்கிழமையும் இரவு பகலாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பரவிப்பாஞ்சான் மக்களை காலை 10 மணியளவில் நேரில் சென்று சந்தித்த அங்கஜன் இராமநாதன், மக்களுடன் கலந்துரையாடியதையடுத்து, இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்தப் பிரச்சினையை எவ்வளவு குறுகிய காலத்துக்குள் தீர்க்க முடியுமோ அதற்குள் முடிப்பதற்கு ஜனாதிபதிடம் பேசி ஒரு நல்ல தீர்மானத்தை எடுக்கவுள்ளேன். ஆனால், காணிகளை எப்போது விடுவிப்பார்கள் என என்னால் உறுதியாக கால எல்லை கூறமுடியாது.
ஆனால், வெகு விரைவில் காணிகளைப் பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளை நிச்சயம் செய்வேன். அத்துடன், கையளிக்கப்பட்ட காணிகளில் பல இன்னமும் மக்கள் பாவனைக்கு கொடுக்கப்படவில்லை என்பது குறித்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் அலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு கேட்டுள்ளேன்.
இது குறித்து அதிகாரிகளுடன் இன்றைய தினம் கலந்துரையாடி அவர்களது பத்திரங்களை சோதித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்' என்றார்.
அவர் இவ்வாறு கூறிச்சென்றாலும், பரவிப்பாஞ்சான் மக்கள், தமது போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
35 minute ago
52 minute ago
1 hours ago