2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'முயற்சியே எமது மூலதனம்'

George   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

'காத்திருப்பவர்களுக்கு நல்ல விடயங்கள் கிடைக்கின்றன. ஆனால் வெளியில் வந்து முயற்சிப்பவர்களுக்கே மிகச்சிறந்த விடயங்கள் கிடைக்கின்றன. இளைஞர்கள் அரச வேலைதான் வேண்டும் என்று அதற்காக காத்திருக்காமல் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடவேண்டும், அதுவே எமது மூலதனம்' என வடமாகாணஅமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். முழங்காவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இளைஞர், யுவதிகளே சுயதொழில் முயற்சியில் ஈடுபடுங்கள், அரசாங்க வேலைதான் வேண்டுமென்று உங்கள் காலத்தினை வீணடிக்காதீர்கள், அனைவரும் அரச பணியில் உள்வாங்கப்படுவது என்பது இயலாத காரியம்.  அது கிடைக்கும்போது உரியவர்களுக்கு கிடைக்கட்டும், அதுவரையில் முயற்சி செய்யுங்கள். குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை உயர்த்துங்கள், முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை, முயற்சியே எமது மூலதனம் என்பதனை எல்லோரும் உணர்ந்து செயற்படுங்கள்' என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .