2025 ஜூலை 10, வியாழக்கிழமை

'முல்லைக்கு 2016இல் ரூ. 6788.577 மில்லியன் கிடைத்தது'

Menaka Mookandi   / 2017 ஜனவரி 06 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு, 2016ஆம் ஆண்டில், 6788.577 மில்லியன் ரூபாய் நிதி, அபிவிருத்தி திட்டங்களுக்குக் கிடைக்கப்பெற்றது என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த  2016, ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும், அதற்காக கிடைக்கப்பெற்ற நிதியுதவியுதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் நடப்பாண்டில், முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் ஆராயும்  கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (06) முல்லைத்தீவு மாவட்ட செயலர்; ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, கடந்த ஆண்டு 6788.577 மில்லியன் ரூபாய் நிதி அபிவிருத்தி திட்டங்களுக்கு கிடைக்கப்பெற்றது. இந்நிதிகளில் இருந்து 6190 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் 5236 மில்லியன் ரூபாய் நிதி இதுவரை செலவிடப்பட்டுள்ளது. 29 வகையான நிதிமூலகங்களூடாக இந்நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்டச் செயலர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .