2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

6.7 மில்லியன் ‌‌‌ரூபாய் செலவில் மூன்றுமுறிப்பு வீதி புனரமைப்பு

George   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்   

வவுனியா பாலமோட்டை மூன்றுமுறிப்பு வீதியின் புனரமைப்பு பணிகள், 6.7 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

வவுனியா பாலமோட்டையினையும் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மூன்று முறிப்பு வீதியினையும் இணைக்கும் வீதி, அதிகளவான மக்கள் பயன்படுத்தும் ஒரு வீதியாக காணப்படுவதுடன் இவ்வீதி புனரமைக்கப்படாத நிலையில் பாரிய குண்டும் குழியுமாக காணப்பட்டது.  

இவ்வீதியினை புனரமைத்து தருமாறு பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம், மடத்துவிளாங்குளம், மூன்றுமுறிப்பு கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  

இந்நிலையில், வடமாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ், வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினூடாக 6.7 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த வீதி புனரமைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்படும் நான்கு மதகுகளும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .