2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘வீடுகளில் மக்கள் இல்லையா?’

George   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்   
இந்திய வீட்டுத்திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளில் மக்கள் இல்லையென்றால், அந்த வீடுகளையும் காணிகளையும் வீடு, காணி இல்லாதவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுங்கள்” என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில், இந்திய வீட்டுத்திட்ட செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு நேற்றுத் கூறினார்.   

“இந்திய வீட்டுத்திட்ட வீடுகள், பயனாளிகள் தெரிவு செய்தே வழங்கப்பட்டன. இன்னும் 53 வீடுகள் கட்டப்படவில்லை என்றால், அதற்கு அப்பகுதி கிராம அலுவலர், பிரதேச செயலாளர் ஆகியோரே பொறுப்பு.   

அவர்கள், இது தொடர்பில் கவனம் செலுத்தி, உடனடியாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திரும்பிச் செல்ல விடக் கூடாது. இந்திய வீட்டுத்திட்ட வீடுகள், உடனடியாக முடிக்கப்பட வேண்டும். அதனை கட்டி முடிக்க நிதி போதாது என்றால், மேலதிகமாக பணத்தை வழங்கி அந்த வீடுகளை கட்டி முடிக்க வேண்டும்.

அந்த வீடுகளுக்கு மக்கள் இல்லை என்றால், வீடு - காணி இல்லாத வேறு மக்களுக்கு அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  தொடர்ந்தும் இது தொடர்பில் அவர் கூறியதாவது, “வவுனியா மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ், வழங்கப்பட்டு கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ள 53 வீடுகளையும் உடனடியாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிதியை திரும்பிச் செல்ல விடவேண்டாம்” என்றார்.   

இதனை, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டு, தீர்மானமாக எடுத்துக் கொண்டனர்.   

வவுனியா மாவட்டத்தில் இந்த வருடம் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 4,756 வீடுகள் வழங்கப்பட்டிருந்தன. அதில் 4,404 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதுடன், 299 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.   

வவுனியா வடக்கில் 18, வவுனியா தெற்கில் 10, வவுனியாவில் 11, செட்டிகுளத்தில் 14 என 53 வீடுகள் கட்டப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .