2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விதிகளை மீறிய வர்த்தகர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்ட கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வர்த்தகர்களுக்கு 93, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பரந்தன், புளியம்பொக்கணை, கண்டாவளை ஆகிய பகுதிகளில் விலைகள் காட்சிப்;படுத்தாமல் பொருட்கள் விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தமை, அதிகூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்தமை போன்;ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 26 வர்த்தகர்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வியாழக்கிழமை (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .