Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிஜோபன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
ஆனைவிழுந்தான் மக்களுக்கு வயல்க்காணிகளை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை வழங்கும் வகையில் வயல்க்காணிகளை பகிர்ந்தளிப்பதற்கான முன்னோடிக் கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (26) நடைபெற்றது.
1983இல் வன்செயல்களால் தென்பகுதியிலிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அவ்வாறு குடியமர்த்தப்பட்ட மக்கள் நாளாந்தக்கூலிகளாக கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வறுமையோடு போராடி வருகிறார்கள். அவர்களுக்கு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்துவதற்காக வயல்க்காணிகளை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. அண்மைக்காலத்தில் ஆனைவிழுந்தானின் கிராமிய அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நேற்றைய கூட்டத்தில் உரிய அதிகாரிகளோடு கலந்து கொண்டு நிலமைகளை ஆராய்ந்தார்.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்,
'கடந்த வன்செயல்கள் மூலமே, இந்தக் கிராமங்கள் தோற்றம் பெற்றன. இங்கு குடியமர்ந்த மக்கள் நாளாந்த சீவியத்துக்காக சிரமப்படுகின்றமை குறித்து நாம் அறிவோம். உங்களுக்கு கிடைக்கவேண்டிய நிலஉரிமையை, அதனூடாக நீங்கள் அடையவிருக்கின்ற பொருளாதார முயற்சியைக்கண்டு மகிழ்ச்சியடைவதே எமது கனவாகும். எனவே, விரைவில் உங்களுக்கான காணிகள் பகிர்ந்தளிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
23 minute ago