Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 10 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பிரதேசங்களிலேயே அதிகளவான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.
பிரதேச மட்ட சிறுவர், முன்பிள்ளைப்பருவ கண்காணிப்புக் குழுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை (10) பிரதேச செயலகக் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
'அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில், அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள சில கிராமங்களில் அதிகளவான சிறுவர் துஷ்பிரயோகங்களுடம் மாணவர்களின் பாடசாலை இடைவிலகளும் அதிகரித்துள்ளமையானது கவலையளிக்கின்றது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'இதன் காரணமாகவே, எமது பிரதேச செயலாளர் பிரிவுகளில் 20 சிறுவர், முன்பிள்ளைப்பருவ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு அதனை தடுப்பதற்கான நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகின்றோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும்,' பதிவு செய்யப்படாத திருமணங்களும் இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு பதிவு மேற்கொள்ளாமலும் உள்ள நிலைமைகளினாலேயே இவ்வாறான குற்றச் செயல்கள் நடைபெறுகின்றது. அத்துடன் பெண்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் என்பனவற்றினாலும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்' என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, முதலில் பதிவு செய்யப்படாத திருமணங்கள், பிறப்புச் சான்றிதழ் வைக்கப்படாத சிறுவர்கள் பற்றிய தகவல்களை பிரிவிலுள்ள கள உத்தியோகஸ்தர்களினூடாக திரட்டி அவ்வாறானவர்களுக்கு நடமாடும் சேவையூடாக பதிவுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
8 hours ago
8 hours ago