Editorial / 2019 மே 07 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - நாயாற்கு கடற்பரப்பில், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈபட்ட இரண்டு படகுகளும் பத்து கடற்றொழிலாளர்களையும் நாயாற்று பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.
முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் கடலில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து வருகின்றார்கள்.
அந்தவகையில், இன்று காலை நாயாற்று கடலில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட புல்மோட்டையினை சேர்ந்த இரண்டு படகுகளை மறிந்து சோதனையிட்ட போது, அவர்கள் சுருக்குவலை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
தடைசெய்யப்பட்ட சுருக்குவலையைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு படகுகளையும் பத்து மீனவர்களையும் கைதுசெய்த கடற்படையினர், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கத்திடம் ஒப்படைத்துள்ளார்கள்.
24 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
54 minute ago
2 hours ago
3 hours ago