Niroshini / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தமது போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான உரிய தீர்வில்லையேல், போராட்டத்தில் ஈடுபட போவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் முல்லைத்தீவு சாலை தலைவர் இராசரத்தினம் கங்கைமைந்தன் தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு சாலையில் போதியளவு பஸ்க்கள் இருந்தும் மக்களுக்கு சிறந்த சேவையை முன்னெடுப்பதற்கு வீதி அனுமதி எடுத்துக்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது. இதற்கு முழுக்க காரணம் முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதான கணக்காளர் ஆவார் என்றார்.
2010ஆம் ஆண்டு தொடக்கம் பிரதம கணக்காளரிடம் இருந்து வீதி அனுமதி பத்திரித்தை கோரி நிக்கின்றோம் எனத் தெரிவித்த அவர், இதுவரை எந்த நேரமும் எடுத்து தரவில்லை எனவும் தற்போது வெளிமாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு வருகின்றார்கள் எனவும் கூறினார்.
"இந்த நிலையில் தொழில்சஙக்க ரீதியில் நாங்கள் வேண்டுவது அந்தந்த சாலைகள்தான் தொழிலாளர்களின் அரைவாசி சம்பளத்தை வழங்க வேண்டிய நிலைப்பாடு. இந்நிலையில் முல்லைத்தீவு சாலைக்கு போதிய வருமானம் இல்லை. மாவட்டத்தில் அளவுக்கு மிஞ்சிய தற்காலிக வீதி அனுமதிப்பத்திரத்தை கணக்காளர் வழங்கி வருகின்றார்.
"தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றைய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தும் திட்டத்தை முல்லைத்தீவிலும் நடைமுறைப்படுத்த கோரிக்கை விடுத்தும், இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
"வெளிமாவட்ட செயலகங்கள் வழங்கும் வீதி அனுமதிப்பத்திரங்கள் போல் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அரச பஸ் சேவைக்கு அனுமதிகளை வழங்க வேண்டும். மாவட்ட செயலக கணக்காளலின் செயற்பாடு காரணமாக மக்களுக்கான சேவையை நாங்கள் வழங்க முடியாதுள்ளதாக இருக்கின்றது.
"தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சட்டம் ஏனைய மாவட்டங்களில் இருக்கின்றது போன்று அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு நடக்காவிட்டால் எதிர்வரும் 10ஆம் திகதி வரைக்கும் பொறுமையுடன் காத்திருப்போம். இல்லாவிடின் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
1 hours ago