2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

11 வருடங்களின் பின்னர் விளையாட்டு​ப் போட்டி நடத்திய பாடசாலை

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, 11 வருடங்களின் பின்னர், தனது சொந்த மைதானத்தில், நேற்று (11) நடைபெற்றது.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர், கிளிநொச்சி மத்திய விளையாட்டு மைதானத்துக்குப் பின்புறமாக உள்ள காணியை, குறித்த பாடசாலைக்கான விளையாட்டு மைதானமாக வழங்கப்பட்டது. அதன் பின்னர் குறித்த காணி இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டது.

பின்னர் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கும் நோக்கில், குறித்த காணியும் உள்வாங்கப்பட்டு, சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும் நாட்டிவைக்கப்பட்டது.

இதனால் குறித்த காணியை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தால் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர், குறித்த காணி மீண்டும் பாடசாலையிடம், அண்மையில் கையளிக்கப்பட்டது.

அதுவரை காலமும் குறித்த பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாது இருந்து வந்த நிலையில், 11 வருடங்களின் பின்னர், நேற்று (11), வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .