2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

125 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில், பொலிஸ்மா அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக, மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தெரிவுசெய்யப்பட்ட 125 மாணவர்களுக்கு, இன்று (31) கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு, மன்னார் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஷாந்தன் தலைமையில், மன்னார் நகர சபை மண்டபத்தில், முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மன்னார் நகர சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .