2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

14 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Super User   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பொறுப்பான நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் 14 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடம்பன் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த குறித்த வர்த்தகர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கணகரட்னம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தமது குற்றத்தை வர்த்தகர்கள் ஏற்றுக்கொண்டதால் தலா 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இவர்கள் காலவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களை விலை கூடி விற்றமை மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை போன்ற குற்றாட்சாட்டுக்களே இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X