Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
2016ஆம் ஆண்டில், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள பாடசாலையில், சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மலசலக் கூடங்கள், இன்று வரை மாணவர்கள் பயன்படுத்த முடியாதுள்ளது என பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்துக்குச் சொந்தமான காணியில், பொதுமக்கள் அடாத்தாக பிடித்து குடியிருந்த நிலையில், அவர்களுக்கு நகரத்தில் பெறுமதி மிக்க இடத்தில் மாற்றுக் காணி வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
ஆனால் பாடசாலை காணியில் வெதுப்பகம் ஒன்றை அமைத்து நடத்தி வருகின்ற ஒருவர் மாத்திரம், காணியை விட்டு மாற்றுக் காணிக்குச் செல்ல மறுத்து, தொடர்ந்தும் பாடசாலைக் காணியிலிருந்து தொழில் செய்து வருகின்றார்.
இதனால் பாடசாலைக் காணியின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட மலசலக் கூடத்தை மாணவர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த மலசலக்கூடத்தைப் பயன்படுத்துவதற்கு மாணவர்கள் வெதுப்பகத்தை கடந்தே செல்ல வேண்டும். ஆனால் குறித்த நபர் வேலி அடைத்துத் தடுத்துள்ளமையால், மாணவர்களால் மலசலக்கூடத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய அரசியல் கட்சி ஒன்றின் பிரதேச சபை உறுப்பினரே, குறித்த காணியில் தொழில் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அதிகளவு மாணவர்களை கொண்டுள்ள நகரில் உள்ள ஆரம்ப பாடசாலை என்ற வகையில் தற்போது பாடசாலையில் உள்ள மலசலகூடங்களையே நெருக்கடிக்குள் மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே மாணவர்களின் நிலையைக் கருதி, குறித்த மலசலக்கூடத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு விடுவித்து தருமாறு, பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், பயன்படுத்தப்படாதுள்ள குறித்த மலசலக் கூடத்தை பல்வேறு சமூகவிரோத செயற்பாட்டுக்கும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர் என பாடசாலை மேலும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
3 hours ago