Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சண்முகம் தவசீலன் / 2018 டிசெம்பர் 10 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்தியில் அபாயாகரமான 15 கிலோகிராம் நிறையுடைய வெடிபொருள் ஒன்று நேற்று (09) மீட்கப்பட்டுள்ளது.
தனியார் காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காணி உரிமையாளர் பழமரக்கண்று ஒன்றை நடுவதுக்காக குழி தோண்டியுள்ளார். இதன்போது மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு ஒன்று இருந்ததை கண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கொக்குத்தொடுவாய் கிரமசேவையாளர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அதிரடிப்படையினர் அபாயகரமான வெடிகுண்டை மீட்டுள்ளனர்.
1984 ஆம் ஆண்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொக்குத்தொடுவாய் பிரதேசம் கொண்டுவரப்பட்டபோது, அந்தப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
27 வருடங்களின் பின்னர் மீண்டும் 2011 ஆம் ஆண்டு பொதுமக்கள் மீள்குடியேறியபோது, பதுகாப்பான பிரதேசம் என இந்தப்பகுதி அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
51 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
56 minute ago
1 hours ago